யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கடந்த 10ம் திகதி ஆண் ஒருவரை கொலை செய்து புதைக்கபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ். வெற்றிலைக்கேணியில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றுள்ளது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சட்டத்தரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட பின் 14நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றது என கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கைதானவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here