யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்த ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று மதியம் 12 மணியளவில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மாணவர்களாலும் பல்கலைக்கழக ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகைச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here