ரணில் விக்கியமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ் நகரில் நேற்று வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து யாழ் நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனின் ஆதரவாளர்களும், ரணிலின் வெற்றியை பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here