இறைவனின் படைப்பால் மாற்றுத்திறனாளியாக வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அந்த வகையில், வறுமையோடு வலிகளையும் பெற்று மீளாத்துயரில் வாழ்ந்து வரும் சுதுமலை கிழக்கு மானிப்பாயை சேர்ந்த ஆறுமுகம் தர்மலிங்கம் தம்பதியினர் ஆறு பிள்ளைகளில் மூவர் மாற்றுத்திறனாளிகள்.

வாழ்க்கையை தொலைத்த தன் பிள்ளைகளின் நிலையை எண்ணி சுமையோடு வாடும் இந்த பெற்றோர் இன்று வரை தனது பிள்ளைகளையும் தோளில் தாங்கிய வண்ணம் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இப்படி வறுமையில் வாழும் இவரின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இ

வர் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் ‘என் இனமே என் சனமே’ என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இவருக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber – +94767776363 / +94212030600 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here