கொழும்பில் இன்று காலை முதல் வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் வீதிகளில் செல்லும் மக்களிடம் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்வையிடும் இராணுவத்தினர், மக்கள் வெளியில் வந்தமைக்கான காரணத்தையும் கேட்டறிகின்றனர்.
அதேவேளை, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களை இராணுவத்தினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வாகனங்களையும் சோதனையிடுகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,