யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் ஆண் ஒருவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளது என சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகத்தின் பேரில் குறித்த இடத்தினை மருதங்கேணி பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்துள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தை தோண்டுவதற்க்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சடலமானது இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச்சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்காலம் எனவும், சந்தேக நபரை கைது செய்வதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here