கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இராணுவ காவலரண்கள் மற்றும் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இராணுவத்தினர் கனரக வாகனங்களில் வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பில் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகமான மோர்னிங் பத்திரிகையின் ஊடகவியலாளரான மேரிஹான் டேவிட் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் எனவும் ஊடக அடையாள அட்டைகளுடன் கூட வெளியில் செல்ல முடியாது எனக் கூறப்பட்டதாகவும் ஆனால், அடையாள அட்டையை காண்பித்த பின்னர் இராணுவத்தினர் சற்று அங்குமிங்கும் செல்ல அனுமதித்தனர் எனவும் அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

எனினும் இதற்கு முன்னர் ஊடக அடையாள அட்டையை காண்பிக்கும் போது, இதற்கு இப்படி நடந்ததில்லை எனவும்  பெரும்பாலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்:கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் (Photos)கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்:கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் (Photos)கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்:கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் (Photos)கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்:கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் (Photos)கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்:கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் (Photos)கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்:கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல் (Photos)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here