கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைகளில் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி இதுவரையில் 218 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.