கிளிநொச்சி – இரணைமடு  குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பொதுமகன் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட நிலையில், சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here