திருகோணமலை – மிகிந்தபுர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றிரவு (08) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 10 கிராம் 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா -அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீண்ட நாட்களாக கிண்ணியா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் சந்தேக நபர் குறித்து வந்த இரகசிய தகவலையடுத்து அவரை பின்தொடர்ந்த பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸாரினால் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு வழக்குகள் ஏற்கனவே அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்னர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here