சீதுவை துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்றாம் திகதி குழந்தையின் தாய், குழந்தையை கிணற்றுக்குள் போட்டுள்ளார். தந்தை மாலையில் வீட்டுக்கு வந்து குழந்தையை தேடிய போது, தான் குழந்தையை கிணற்றுக்குள் போட்டு விட்டதாக பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவத்தை மறைக்க சந்தேக நபர், குழந்தையின் உடலை கிணற்றில் இருந்து வெளியில் எடுத்து, கழிவறை குழிக்குள் போட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here