மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குப் படகில் சென்ற 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்கலாக 12 நபர்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இரு படகோட்டிகளுமே இவ்வாறு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று காலை 5 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்கலாக 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here