யாழ். பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று(26) இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவத்தில் உடுத்துறை வடக்கு தாளையாடி பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் தவமலர்(60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்துடன் முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here