வெலிவேரிய பகுதியில் நபரொருவர் தனது மனைவி உட்பட 3 பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து குறித்த நபர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான சந்தேகநபரின் மனைவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான ஏனைய இரு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வேபட வடக்கில் வசிக்கும் 33 வயதுடைய பெண் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here