எரிபொருள் நிரப்பிய புறப்பட்டுச் செல்ல தயாராக கார் ஒன்றின் சாரதி காருக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 7.30 அளவில் வென்னப்புவை- தம்பரவில பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இந்த மரணம் சம்பவித்துள்ளது. கொச்சிக்கடை-போருதொட்ட பகுதியில் வசித்து வந்த மொஹமட் ஜெஸ்மின் என்ற நபரே இவ்வாறு மரணித்துள்ளார்.
காருக்கு எரிபொருளை நிரப்ப அவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்துள்ளதுடன் எரிபொருளை நிரப்பிய பின்னர் சில அடி தூரம் கார் சென்றுள்ளதுடன் திடீரென நின்றுள்ளது.
அப்போது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது எரிபொருளை நிரப்பிய காரில் சாரதி ஆசனத்தில் இருந்த நபர் இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியர்கள் சம்பவம் பற்றி வென்னப்புவை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வென்னப்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நின்றவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.