நாட்டில் இன்று 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சாரசபை கோரியிருந்தது.

எனினும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்ததுடன் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ள.

இதன்படி, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கும் உட்பட்ட பிரதேசங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here