யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட பேரணி பலாலி வீதியின் ஊடாக யாழ். நகரை வந்தடைந்துள்ளது.

பெருந்திரளான மக்கள் விண்ணைப்பிளக்கும் சத்தத்துடன் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்றாம் இணைப்பு  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட பேரணி பலாலி வீதியின் ஊடாக யாழ். நகரை நோக்கி நகர்ந்து வருகின்றது.

எனினும் குறித்த பேரணி எந்த இலக்கை அடையவுள்ளது என்பது தொடர்பிலான தகவல் இதுவரையில் தெரியவரவில்லை.

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பரமேஸ்வரா சந்தியை நோக்கி நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போராட்டத்தில் பெருமளவில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் களமிறக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மை இன மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பவற்றை சுட்டிக்காட்டி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியிலும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here