யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில் இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதடையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் முற்படுமாறு கோரியதற்கிணங்க பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான கணவரிடம் குழந்தை 5 மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இடைக்கால கட்டளை வழங்கிய நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு நேற்றைய தினம் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு தாயார் குழந்தையை பல இடங்களிலும் தேடி அலைகின்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here