புலனாய்வுப் பிரிவினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான செய்தி தொடர்பில் பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பெப்ரவரி 17ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில்,
அரச புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட இனந்தெரியாத நபர்கள் இளைஞர் ஒருவரை வெள்ளைவானில் கடத்திச் செல்ல முயற்சித்தனர் என குற்றம் சுமத்தியிருந்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் பிரிவு துணைச் செயலாளரான நிதான்ஷான் என்ற இளைஞரே இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் கடத்திச் செல்ல முயற்சித்தனர்” என சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த வான் உளவுத்துறைக்கு சொந்தமானது அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், வானில் இருந்தவர்கள் உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் தெரியவந்தது. அருள் நிதான்ஷான் எந்த வகையிலும் கடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுள்ளது.