வவுனியா- சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா- குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. அத்துடன் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் 2 பவுண் நகை திருடப்பட்டிருந்தது.

வீடு புகுந்து இடம்பெற்ற இத்திருட்டு சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.ஏ.எஸ்.ஜயக்கொடி யின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான (37348) திஸாநாயக்க, (61461) திலீப், (36099) விக்கிரமசூரிய, பொலிஸ் கொன்ஸ்தாபிள் (91792) தயாளன் உள்ளடங்கிய குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் குறித்த இரு திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here