சாவகச்சோி – மட்டுவில் பகுதியில் நஞ்சு திரவகம் அருந்திய 14 வயதுடைய மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த மாணவன் பட்டாசு வெடித்தமைக்காக மாமன் கண்டித்ததால் கோபமடைந்து உயிரை மாய்க்கும் நோக்கில் நஞ்சருந்திய நிலையில் சாவகச்சோி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சையின் பின்னர் அவர் தேறிவரும் நிலையில் அந்த மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மாணவன் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நஞ்சு திரவகத்தை அருந்தியதாக அறியமுடிந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here