மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 165 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை விடுத்துள்ள கோவிட் தொற்று நிலவர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 8 நாட்களில் 165 கோவிட் தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் மன்னார் மாவட்டத்தில் 1832 தொற்றாளர்களும், தற்போது வரை மாவட்டத்தில் மொத்தமாக 1849 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 22 கோவிட் தொற்று மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here