மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்குண்டு தனது கையை இழந்தவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் வெற்றிகரமாக மீளவும் கையை பொருத்தியுள்ளனர்.

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்வன் தலமையிலான மருத்துவர்கள் குழாம் சிதைந்த பாகங்களை மீள பொருத்தி மறுவாழ்வு கொடுத்துள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி கடலில் விழுந்த நிலையில் வலது கை மற்றும் வலது காலில் படகின் காற்றாடிக்குள் சிக்கி சிதைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மூலம் சிதைவடைந்த பாகங்கள் மீள இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் சுமார் 5 மணி நேரம் மேற்கொண்ட சத்திர சிகிச்சை மூலம் மீனவருக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்திருக்கின்றது.

மன்னாரை சேர்ந்த குறித்த மீனவர் பருத்தித்துறை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி படகின் பின்புறமாக கடலில் விழுந்துள்ளார். இதன்போது படகை இயக்கும் உலோக காற்றாடி மீனவரின் வலது கால் மற்றும் கையை சிதைத்துள்ளது.

இதனையடுத்து மீனவர் நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here