அம்பாறை – தமன பிரசேதத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீன வத்த – கொங்கஸ் சந்தி பிரதேசத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த இளம் பெண் கடத்தப்பட்டதாக பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வென்னப்புவ – கதானகெதர பொலிஸாருக்கு தாய் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட விசாரணையில் இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை இவ்வாறு அந்த பெண் வீதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போது குறித்த பெண் அம்பாறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here