வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இன்று 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

நாள் ஒன்றில் வடக்கில் உள்ள மாவட்டம் ஒன்றில் பதிவாகிய அதிக பட்ச கோவிட் மரணங்கள் இதுவாகும். இந்நிலையில் மரணித்த 16 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை,வவுனியாவில் மேலும் 178 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில  இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 178 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here