மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவாவய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க கோரியே இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தற்போதைய கொரோனா காலப்பகுதியில் சாதாரண கடமையை விட அதிக நேரம் கடமையாற்றுவதாகவும், அன்ரிஜன், பீ.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பராமறித்தல் உள்ளிட்ட மேலதிக கடமைகளை மேற்கொண்டாலும், இதுவரை தமக்கான மேலதிக நேர கொடுப்பனவை வழங்கவில்லை எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.

அத்தோடு, தமது மேலதிக நேர கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் வகையில் மகஜர் ஒன்றையும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இவர்கள் இதன்போது கையளித்தனர்.

  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here