யாழ். சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 114 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில் 27 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மருத்துவ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.