மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நல்லையா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த சடலம் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்த செல்வரெட்னம் குலேந்திரன் என்னும் 73 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் கணக்காளராக கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்த நிலையிலேயே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி ஜீவரெட்னம் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார்.

அவரின் பணிப்புரைக்கு இணங்க சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here