புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேகநபர்கள் நேற்று கொவிட் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தபோது, தமது கைத்தொலைபேசியில் அங்கிருந்த நோயாளர் ஒருவரை படம்பிடிக்க முயன்றுள்ளனர்.
அவ்வேளையில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவர்களை தடுக்க முயன்ற போது, இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில், வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.