யாழ். வல்வெட்டித்துறையில் 99 வயதுடைய மூதாட்டியொருவர் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை சிவகுரு வீதி, மாதவடியைச் சேர்ந்த தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

1922ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி பிறந்த புஸ்பகாந்தியம்மாவிற்கு 12 பிள்ளைகளும்  64 பேரப்பிள்ளைகளும் 133 பூட்டப்பிள்ளைகளும் 42 கொள்ளுபேரப்பிள்ளைகளும் உள்ளனர்

அவர் தனது வீட்டில் நேற்றுமுன்தினம் திடீரென நோய் வாய்வாய்ப்பட்ட நிலையில் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனையடுத்து அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனோ தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here