அனுராதபுரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக தினசரி வருமானத்தை இழந்த குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 கொடுப்பனவை அவர்கள் இவ்வாறு கொவிட் நிதியத்திற்காக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மிகவும் கடினமான சூழலில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் குடும்பத்தினரே இவ்வாறு தங்களுக்கு கிடைத்த கொடுப்பனவை இவ்வாறு தியாகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அனுராதபுரம், தலாவ, ஹங்குரங்கெத்த பிரிவின் அருனபுர கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அவர்கள் இந்த கொடுப்பனவை கொவிட் நிதியத்திற்கு வழங்குமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய அருனபுர கிராமத்தை சேர்ந்த மக்கள் மேலும் சில உதவிகளை சேர்த்து அதனை கொவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளனர்.

நெருக்கடியான காலத்தில் மிகவும் பின்தங்கி கிராம மக்களின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here