யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த (78 வயது) பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (99 வயது) பெண் ஒருவர், மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அவரது சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மந்திகை ஆதார வைத்தியசாலையில், கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த (77 வயது) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 276ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here