திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பொலிஸார், விமானப்படை உத்தியோகத்தர்கள், விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சூதாடிய குற்றச்சாட்டின் பேரில் 10 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயது தொடக்கம் 55 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.