யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 39 பேர் உட்பட வட மாகாணத்தில் 126 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் 438 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 126 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது.
அத்துடன் இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதுடன் நேற்று கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 9806ஆக அதிகரித்துள்ளது.