யாழ். காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகர், அல்வின் வீதியில் கடந்த புதன்கிழமை குறித்த திருமண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒளிப்படங்களில் காணப்பட்டவர் முகக்கவசம் கூட அணிந்திருக்காத நிலையில், சுகாதாரத் துறையினர் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here