மட்டக்களப்பு – தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் பௌத்த விகாரையொன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த குறித்த பௌத்த விகாரையின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ கூறுகையில், அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படும் விகாரை தொகுதியில் இருந்து 16 கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காவன்திஸ்ஸ மன்னரால் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான கல்வெட்டும் இதில் அடங்குகின்றது.

இந்த விகாரை தொகுதியில், சிறிய தூபி, புராதன கட்டடம், புராதன கற்கள் மற்றும் சேதமடைந்துள்ள சிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சியை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here