யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக இரகசிய தகவல், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால், கொக்குவிலில் பகுதியின் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திடீரென சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here