வவுனியா தாண்டிக்குளம் மற்றும் கொறவப்பொத்தானை வீதிகளில்ல அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில், உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் நாட்டிலுள்ள தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் அரசினால் அறிவிக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத இரண்டு நெற்களஞ்சியசாலைகளுக்கு வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபையால் நிர்ணய விலையினை செலுத்தி கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here