வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர்.

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த இராகவன், வளவன் ஆகிய இரு மீனவர்களும் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் நேற்றைய தினம் கரை திரும்பாததை அடுத்து, சக மீனவர்கள் அவர்களை தேடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் காணாமல்போன மீனவர்களின் வலைகள் அறுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவம் குறித்த கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை அன்றைய தினம் வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்களின் படகின் மீது இந்திய இழுவை படகு மோதியதில், அவர்களின் படகு பலத்த சேதமடைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் அவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here