வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 328 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது.

இந்த நிலையில் சடங்குகளிற்கோ, நிகழ்வுகளுக்கோ தேவையற்ற விதத்தில் வீட்டில் இருந்து வெளியில் வருவதனை இயன்றளவு தவிர்க்கும் போது நோய் பரம்பலை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here