கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 60 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 76 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 40 ஆயிரத்து 302 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 185 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here