யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20ஆம் திகதி இரவு முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here