நீர்கொழும்பில் தொழிலதிபர் ஒருவர் மர்மமான  முறையில் மரணமானமை தொடர்பில்  குறித்த நபரின்  மனைவி மற்றும் ஒரு ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிலதிபர் 2020 அக்டோபர் 3 ஆம் திகதி மரணமானார்.

இந்தநிலையில் காவல்துறையினர் மரணம் குறித்த முக்கியத் தகவல்களைப் பெற்றதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனையடுத்து தொழிலதிபரின் மனைவி மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவர் ஆகியோர் மரணம் தொடர்பாக  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here