கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் இருந்து இரு செல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உழவனூர் மற்றும் பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில் இருந்தே இன்றைய தினம் குறித்த செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த பகுதிகளுக்கு சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் நீதிமன்ற அனுமதியுடன் செல்களை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.