பயணக்கட்டுப்பாடு விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் வவுனியாவை சேர்ந்த மூவர் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் வான் ஒன்றில் பயணம் செய்த வவுனியா புளிதறித்த புளியங்குளத்தை சேர்ந்த இருவரும் செக்கட்டி பிலவு பம்பைமடு பகுதியை சேர்ந்த ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.