முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்த இடத்தை நேற்று மாலை முற்றுகையிட்டதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமலவீர தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கோடா கசிப்பு, ஸ்பிரிட் 2 லீற்றர் மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here