வவுனியா, சகாயமாதாபுரத்தில் 29 பேர் உட்பட 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (11.06) வெளியாகின.

அதில், சகாயாமாதாபுரம் பகுதியில் இருபத்தொன்பது பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் எட்டு பேருக்கும், மகா இலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், குருமன்காடு பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும்,

தாலிக்குளம் பகுதியில் பொலிசார் ஒருவருக்கும், தேக்கவத்தைப் பகுதியில் ஒருவருக்கும், வவுனியாவில் தங்கியுள்ள ஒட்டிசுட்டானைச் சேர்ந்த ஒருவருக்கும் என 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா சகாயமாதாபுரம் கிராமத்தில் ஏற்கனவே 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தற்போது 29 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் இக் கிராமத்தில் 96 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here