முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும் என மூவர் கோவிட் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 பேரும், வவுனியா மாவட்டத்தில் 23 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.