கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரனின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் வேலைத்திட்டம் கடந்த புதன்கிழமை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் நேற்று பயணக் கட்டுப்பாட்டை மீறி இரவு நேரங்களில் வீதிகளில் நடமாடிய 32 நபர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்ற பரிசோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.