முல்லைத்தீவு – உப்புமாவெளி பகுதியில் பாரிய மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்களை கைது செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உப்புமாவெளி பிரதேசத்தில் உள்ள ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணியில் குவிக்கப்பட்டுள்ள மணல் குவியல்கள் தொடர்பாக, முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான், மணல் அகழ்வுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, உப்புமாவெளி மணல் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்றைய தினம் கணியவளத் திணைக்களத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த மணல் அகழ்வுக்கான அனுமதி பெறப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரிவித்த அதிகாரிகள், யாழ்ப்பாணம் சென்று, இது தொடர்பான அறிக்கையை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here